News March 23, 2024
அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,272 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் முதல் கட்ட பயிற்சி மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News August 17, 2025
வேலூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
News August 17, 2025
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு 6 மையங்களில் இன்று(ஆக.17) நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,823 பேர் எழுதினார். வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடன் இருந்தார். தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது