News December 15, 2024
பழனி அருகே முதியவர் கொலை: 3 பேர் கைது

பழனியை அடுத்த பாப்பம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன்(70), அவரது மகள் பார்வதி(45). நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு-வை மாரியப்பன் அவதூறாக பேசியுள்ளார். அதனால் ஏற்பட்ட தகராறில் சின்னப் பொண்ணு, மருமகள் சுதா, மகன் மாசிலாமணி ஆகிய மூவரும் மாரியப்பனைத் தாக்கினா். மாசிலாமணி, மாரியப்பனை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News March 11, 2026
திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்!

வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் ஹோட்டல் உரிமையாளர் தொட்டியப்பனிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, 2 செல்போன்களை பறித்த வழக்கில் சேனன்கோட்டை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News March 11, 2026
பழனி அருகே உடல் கருகி பரிதாப பலி!

பழனி அருகே கணக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவமணி (80). இவர் வீட்டில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தீயில் கருகி சிவமணி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனி ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 11, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 10) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


