News December 15, 2024
இவ்வளவு நாள் வாழைப்பழத்தை தவறாக சாப்பிடுகிறோமா?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தில் நன்மைகள் இருக்கும் போதிலும், அதனால் உடலுக்கு சில சிக்கல்கள் உண்டாகும். ஒரு நாளைக்கு 3, 4 வாழைப்பழத்தை எடுத்து கொள்வது உடல் எடை அதிகரிக்கும். காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்ணும் போது, அசிடிட்டி, வாயு தொந்தரவு ஏற்படலாம். கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் சூழலில், செரிமான பிரச்னைகள் உண்டாகலாம். அதே போல, ஒரு நாளைக்கு ஒரு பழம் எடுத்துக்கொள்வது நல்லது.
Similar News
News August 29, 2025
7 நாள்கள் விடுமுறை.. சரியாக பிளான் பண்ணுங்க!

செப்டம்பரில் வங்கிகளுக்கு மொத்தம் 7 நாள்கள் விடுமுறையாகும். வழக்கம்போல், அனைத்து ஞாயிறுகளிலும்( செப்.7, 14, 21, 28) வங்கிகள் செயல்படாது. அதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளிலும் (செப்.13, 27 ) விடுமுறை. மேலும், செப்.5-ம் தேதி மிலாடி நபியையொட்டி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் இயங்காது. இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT
News August 29, 2025
இந்த பைக்குகளின் விலை ₹45,000 வரை உயருகிறது

அடுத்த மாதம் நடைபெற உள்ள GST கவுன்சில் கூட்டத்தில், பிரீமியம் ரக 2 சக்கர வாகனங்கள் மீதான வரி உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 350 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட 2 சக்கர வாகனங்களுக்கு தற்போது 28% GST + 3% செஸ் என 31% வரிவிதிக்கப்படும் நிலையில், அது 40% ஆக உயர வாய்ப்புள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு, அப்ரிலியா, ஹார்லி டேவிட்சன், KTM பைக்குகளின் விலை ₹25,000 – ₹45,000 வரை உயர வாய்ப்புள்ளது.
News August 29, 2025
டிரம்ப் ரஷ்யாவிற்காக வேலை செய்கிறார்: போர்ச்சுகல் அதிபர்

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய நலன்களுக்காகவே டிரம்ப் பாடுபடுவதாக போர்ச்சுகல் அதிபர் மார்சிலோ டி சௌஸா விமர்சித்துள்ளார். டிரம்ப் ரஷ்யாவின் சொத்து என்றும், மத்தியஸ்தம் செய்வதில் அவர் ஒன்றும் சிறந்தவர் இல்லை என்றும் டி சௌஸா சாடியுள்ளார். டிரம்ப் ரஷ்ய ஆதரவு குற்றச்சாட்டிற்கு உள்ளாவது இது முதல்முறை கிடையாது. டிரம்பின் தேர்தல் பிரசாரங்களை ரஷ்யா வகுத்து கொடுப்பதாக 2016-ல் ஜனநாயக கட்சி விமர்சித்தது.