News December 15, 2024

ICUவில் சிகிச்சை பெறுகிறார் LK அத்வானி

image

பாஜக மூத்த தலைவர் LK. அத்வானிக்கு ICUவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 97 வயதாகும் அவர், உடல் நலக்குறைவால் நேற்று டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Similar News

News March 18, 2026

திருவள்ளூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருவள்ளூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 18, 2026

தேர்தல் தேதி மாற்றமா? திடீர் பரபரப்பு

image

புதுச்சேரி பேரவை தேர்தலை TN-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்.23 அன்றே நடத்த கோரி ECI-க்கு புதுவை DMK கடிதம் அனுப்பியுள்ளது. இரு தேர்தல்களும் வெவ்வேறு நாள்களில் உள்ளதால், TN-ல் பணியாற்றும் புதுவையை சேர்ந்தோர் சிரமப்படுவர் என்றும் DMK குறிப்பிட்டுள்ளது. புதுவை பேரவையின் பதவிக்காலம் ஜூன் 15 வரை உள்ளபோதும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதிலுள்ள அவசரம் குறித்து விளக்க வேண்டும் என்றும் DMK கேட்டுள்ளது.

News March 18, 2026

விஜய்யை எதிர்த்து ரஜினி ரசிகர் போட்டி

image

‘எங்கள தொட்டவங்கள நாங்க விட்டதே இல்ல’ என ரஜினி ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட து.செ., கூறியுள்ளார். தவெக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவர் என்றார். தற்போது நெல்லையில் போட்டியிட வேட்புமனு வாங்கியுள்ளதாகவும், விஜய் நிற்கும் தொகுதியிலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினியிடம் ஆதவ் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!