News December 15, 2024
திருநெல்வேலி – திருவனந்தபுரம் மெமு ரயில் என்னாச்சு?

திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே மெமு ரயில் இயக்க வேண்டும் என்பது நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு. ஆனால் கேரளாவில் சோரனூர் – கண்ணூர், கொல்லம் – எர்ணாகுளம் ஆகிய இரண்டு பாசஞ்சர் ரயில்களை அங்குள்ளவர்கள் பெற்றுக் கொண்டனர். நெல்லை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே மெமு ரயில் என்னவாயிற்று என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News March 15, 2026
நெல்லை: கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT
News March 15, 2026
FLASH: நெல்லை பஸ் நிலைய கொலையாளியின் வாக்குமூலம்!

பாலாமடை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சுதாகர்(29). இவர் தனது மனைவி பேச்சியம்மாளை(26) இன்று நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில், வெட்டி படுகொலை செய்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தகாத உறவு காரணமாக கொலை நடந்தததாக தகவல். இதுகுறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது மற்றும் 2 வருடமாக கருத்து வேறுபாட்டால் பிரச்னை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2026
திருநெல்வேலி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

திருநெல்வேலி மக்களே..! போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!


