News December 15, 2024
10 ரூபாயில் இளமையாகலாம்..!

வெறும் 10 ரூபாயில் நமது அன்புக்குரிய தாத்தா, பாட்டிகளை ஆரோக்கியமாக வாழ வைக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காலை, மாலை என ஒருநாளைக்கு 2 பலூன்களை ஊதி பேரக்குழந்தைகளுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். இது ஒரு நாளைக்கு 200மீட்டர் நடப்பதற்கு சமமானது எனக் கூறுகின்றனர். இதயம், நுரையீரலுக்கான சிறந்த உடற்பயிற்சி இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News March 27, 2026
மாநில அரசியலில் கால்பதிப்பாரா கனிமொழி?

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் திமுக மும்முரமாக உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி MP-யான கனிமொழியை வரும் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என நெல்லை – தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகளிர் உரிமைகள், பெண்களின் நலனுக்கான சிறந்த அரசியல் தலைவராக அவர் விளங்குவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.<<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
குழந்தைகளுக்கு தேன் கொடுக்காதீங்க.. ஆபத்து!

1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தேன் அல்லது தேன் கலந்த உணவுகளை கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வயதில் குழந்தைகளின் செரிமான அமைப்பு முழு வளர்ச்சியடையாததால், தேனை அவர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது. மேலும், Clostridium என்ற பாக்டீரியா அதில் இருப்பதால் மலச்சிக்கல் தொடங்கி தசை பலவீனம் எனப் பல பிரச்னைகள் ஏற்படலாம். SHARE.
News March 27, 2026
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அதிகரிக்கிறதா?

+2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் 3-வது வாரத்தில் இருந்து விடுமுறை தொடங்கும். வழக்கமாக கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கெனவே தேர்தலையொட்டி கோடை விடுமுறை முன்கூட்டியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. SHARE IT


