News December 15, 2024

மலை ரயில் சேவை மேலும் 3 தினங்களுக்கு ரத்து!

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கனமழையால் மலை ரயில் சேவை கடந்த டிச.13,14 ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, தண்டவாளம் சேதவடைந்துள்ளது. சீரமைப்பு பணி காரணமாக டிச.15,16,17 உள்ளிட்ட 3 தினங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

Similar News

News March 10, 2026

SSLC பொதுத்தேர்வு: 38,390 மாணவர்கள் எழுதுகின்றனர்

image

கோவையில் மார்ச் 11-ல் தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 509 பள்ளிகளைச் சேர்ந்த 38,390 மாணவர்கள் 159 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 250 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 949 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News March 10, 2026

கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று துவங்கியது

image

ஈரான் -இஸ்ரேல் போர் காரணமாக கோவை ஷார்ஜா மற்றும் கோவை- அபுதாபி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்.
கோவை – ஷார்ஜா விமான சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3:10 மணிக்கு புறப்பட்ட விமானம் கோவை வந்தடைந்தது. அதேபோல அதிகாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து ஒரு விமானம் ஷார்ஜா புறப்பட்டு சென்றது.

News March 10, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!