News December 15, 2024
பாராசிட்டமால் எடுக்குறீங்களா?

தலைவலி, காய்ச்சல் என்றதும் உடனடியாக பாராசிட்டமால் மாத்திரைகள் உட்கொள்வோர் ஏராளம். பாராசிட்டமால் மாத்திரையை 65 வயதிற்கு மேற்பட்டோர் அடிக்கடி பயன்படுத்தினால், மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயதானோர் இந்த மாத்திரையை அடிக்கடி எடுத்துக்கொள்வதால், சிறுநீரக பாதிப்பு 19%, மாரடைப்பு 9%, உயர் ரத்த அழுத்தம் 7% அதிகரிக்க காரணமாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News March 8, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் விஜய்? பரபரப்பு தகவல்

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் விஜய்யை கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருகிறாரா? இல்லையா என்பதை தெரிந்துகொண்டு தொகுதிப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
News March 8, 2026
நகைக்கடன் தள்ளுபடி… வெளியானது மகிழ்ச்சி செய்தி

திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் மாநாட்டில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை CM ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். இதனால், எந்த மாதிரியான அறிவிப்பு வெளியாகும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு இலவச மானிய சிலிண்டர், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 8, 2026
அரசியல் அடிப்படை மாறணும்: சீமான்

தமிழக அரசியலில் அடிப்படை மாற வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்திய கட்சிகளுக்கு மும்மொழி, திராவிட கட்சிகளுக்கு இருமொழி, எங்களுக்கு (நாதக) தமிழ் மொழிதான் கொள்கை என்று தெரிவித்துள்ளார். ஆள், மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டாம், அரசியல் அடிப்படை மாற வேண்டும் எனக் கூறிய அவர், சகித்து சகித்து அடிமையாக உள்ளோம்; புரட்சியால்தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார்.


