News December 14, 2024
ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்: PM

அரசியலமைப்பின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தை நேசிக்கும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு பெருமையான தருணம் என குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க 370 சட்டப்பிரிவை நீக்கியதாகவும், ஆனால் இதில் கூட சிலர் விஷ கருத்துக்களை விதைத்து பிரிவினையை உருவாக்க முயற்சித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
சற்றுமுன்: ₹2,500ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
News August 29, 2025
இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்: விஷால்

நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஷால் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கடவுள் தனக்கு அனுப்பிய தேவதை தன்ஷிகா என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், பேச்சுலர்களாக இருக்கும் சிம்பு, அதர்வா, ஜெய், திரிஷாவுக்கு நல்ல நேரம் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
SPACE: கருந்துளையும் சுவாரஸ்யங்களும்..

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மமாக கருதப்படும் கருந்துளை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், சில விஷயங்களை விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். ▶ஒரு சின்ன ஒளி கூட கருந்துளை பக்கத்தில் செல்லமுடியாது, அது விழுங்கிவிடும் ▶திரைப்படங்களில் காண்பிப்பது போல BlackHole-கள் மூலம் வேறு உலகத்திற்கு செல்ல முடியாது ▶BlackHole-ல் Gravity அதிகம் என்பதால், அதில் சிக்குபவர்கள் நூடுல்ஸ் போல ஆகிவிடுவார்களாம்.