News December 14, 2024
சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி!

கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும், பஸ்களும் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல், இருமுடியுடன் 18 படி ஏறி வந்து ஐயப்பனை தரிசித்தார். அப்போது, அவருக்கு ஐயப்பன் விக்கிரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News March 22, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 22.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 22, 2026
BREAKING: அஇபுதமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அஇபுதமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சசிகலா அறிவித்துள்ளார். நெட்டப்பாக்கம் – சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – லாவண்யா, இந்திரா நகர் – ஜெயபால் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் இவர்கள் வெற்றி பெறுவதற்கு அஇபுதமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 22, 2026
ரயில் மீது கல் எறிந்தால் 10 ஆண்டுகள் சிறை: ரயில்வே

ரயில் மீது கல் வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே எச்சரித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் சாதாரண விளையாட்டல்ல, ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கடுங்குற்றம் எனவும் தெரிவித்துள்ளது. சிசிடிவி & நவீன கருவிகள் உதவியுடன் கல் எறிபவர்களை கண்டறிந்து, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.


