News December 14, 2024
விவசாயக் கடனுக்கு RBI சொன்ன GOOD NEWS

சிறு, குறு விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், பிணையம் இல்லாத விவசாயக் கடன்களுக்கான வரம்பை ₹1.6 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக அண்மையில் RBI உயர்த்தியது. அந்தவகையில், 2025 ஜன.1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என RBI அறிவித்துள்ளது. விவசாயிகள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது: ஸ்டாலின்

வக்ஃபு வாரிய சட்டத்தில் செய்துள்ள திருத்தங்களை நீக்கும் ஒரு முக்கிய நகர்வாக <<17714489>>உச்சநீதிமன்ற உத்தரவு <<>>அமைந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த முன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, திமுக இதனை எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளை SC பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக CM கூறினார்.
News September 15, 2025
இடது கையில் Watch கட்டுவது ஏன் தெரியுமா?

யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என்றாலும் தானாகவே வாட்ச்சை இடது கையில் கட்டும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா? பெருவாரியான மக்கள் Right Handers என்பதால், அன்றாட வேலைகளை செய்யும்போது இடையூறு ஏற்படாமல் இருக்க Watch-ஐ இடது கையில் கட்டுகின்றனர். இதனால் வாட்ச் சேதமாவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. இவர்களுக்காக தான் வாட்ச்களின் பொத்தான்களை பெரும்பாலான கம்பெனிகள் வலது பக்கத்தில் வைக்கிறதாம்.
News September 15, 2025
BREAKING: நாய் கடித்து 22 பேர் மரணம்.. தமிழகத்தில் அதிர்ச்சி

நாய்க்கடி தொடர்பான அதிர்ச்சிக்குரிய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்தாண்டில் 8 மாதங்களில் மட்டும் 3.60 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாய் கடியை தடுப்பதற்கும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.