News December 14, 2024
பெரியாரை மேற்கொள்காட்டிய ராகுல்காந்தி..!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின் போது ராகுல் காந்தி காரசாரமாக பேசினார். அவர் பேசுகையில், அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து மனுஸ்மிருதியை தூக்கிப் பிடித்தவர் சாவர்க்கர். அவரது வழியைதான் பாஜக பின்பற்றுகிறது. தமிழ்நாடு என்றால் பெரியார், கர்நாடகா என்றால் பசவண்ணா, மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர். சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட இவர்களையே, காங்கிரஸ் பின்பற்றுகிறது என்றார்.
Similar News
News March 12, 2026
பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார்: உதயநிதி

வரும் தேர்தலில் பாஜக-அதிமுக அடங்கிய டெல்லி அணியை TN மக்கள் கிளீன் போல்ட் செய்வார்கள் என உதயநிதி கூறியுள்ளார். அரியலூரில் பேசிய அவர், தமிழகத்துக்கான 3,200 கோடி கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதியை தராமல் பாஜக அரசு வஞ்சிக்கிறது; இந்த அநியாயத்திற்கு EPS துணை போகிறார் என உதயநிதி குற்றஞ்சாட்டினார். அத்துடன் தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்: இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. ▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
News March 12, 2026
போர் முடிவுக்கு வர ஒரே வழி இதுதான்: ஈரான்

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் போர் நிலைமை குறித்து விவாதித்ததாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பிராந்திய அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதிபூண்டுள்ளது என்றார். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி என்றும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


