News December 14, 2024

ராணிப்பேட்டையில் வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் 

image

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அரக்கோணம் தெற்கு பிர்காவுக்கும், அரக்கோணம் தெற்கு வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன் வாலாஜா ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் மாற்றம் செய்துள்ளார். இதேபோன்று மாவட்ட முழுவதும் 37 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளார்.

Similar News

News November 12, 2025

சமூக நல துறையின் செயல்பாடுகள் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.12) தேதி சமூக நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், நிலுவை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் சமூக நலன் அலுவலர் பால சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

ராணிப்பேட்டை: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கே கிளிக் <<>>செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

ராணிப்பேட்டை: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

image

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 1-9-2013 தேதி அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும் அதன்படி வரும் 15ஆம் தேதி மாவட்ட அணி தேர்வு முகாம் காலை 8 மணியளவில் ராணிப்பேட்டை இஐடி பேரி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.

error: Content is protected !!