News December 14, 2024
பும்ரா டெஸ்ட்டில் இருந்து விலக வேண்டும்: அக்தர்

டெஸ்ட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுவதே நல்லது என சோயப் அக்தர் அட்வைஸ் கொடுத்துள்ளார். தான் பும்ராவாக இருந்தால், அதையே செய்திருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெஸ்ட்டில் பேட்ஸ்மேன்கள் விளாச முயற்சிக்காமல், தடுத்து ஆடவே முயற்சிப்பதால் பவுலிங் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், அது காயத்தை ஏற்படுத்தும் என்பதால், T20, ஒருநாள் போட்டிகளில் பும்ரா கவனம் செலுத்தலாம் என அக்தர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 11, 2026
விழுப்புரத்தில் காதல் தம்பதி பரிதாப சாவு!

சோழகனூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திபரதன்(26). இவருக்கும் ராஜகுமாரிக்கும்(23) காதல் திருமணம் நடைபெற்று, பிரதாப்(4), இனியா(2) என குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று(மார்ச் 10) தம்பதியிடையே நடந்த தகராறால் ராஜகுமாரி, கிணற்றில் குதித்தார். உடனே மனைவியைக் காப்பாற்ற சக்திபரதனும் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடலை உறவினர்கள் போராடி மீட்டனர்.
News March 11, 2026
இன்னும் முடியவில்லையா திமுக – காங்., பஞ்சாயத்து?

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். அதில், திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸும் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக பேசப்படுகிறது.
News March 11, 2026
பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கும். ➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.


