News December 14, 2024
நெல்லை பஸ் ஸ்டாண்டில் மழை நீரை தடுக்க நிதி ஒதுக்கீடு

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச.14) கூறியதாவது; நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பெரியார் சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக வெள்ள நீரை தடுப்பதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Similar News
News March 10, 2026
22,601 பேர் நெல்லை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 11ம் தேதி புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 22,601 பேர் இந்த தேர்வு எழுத உள்ளனர். இதில் 11,243 பேர் மாணவிகள் ஆவர் 11,358 பேர் மாணவர்கள் ஆவர் என சிஇஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
நெல்லை – மங்களூர் வழி தடத்தில் புதிய ரயில்

நெல்லை – கர்நாடக மங்களூரு இடையே புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.தொடங்கி வைக்கிறார். வண்டி எண்: 16707 / 16708 நெல்லையிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு செல்லும். மறுமார்க்கத்தில், மங்களூருவிலிருந்து வியாழன் மதியம் 1 மணிக்கு புறப்படும்.
News March 10, 2026
திருநெல்வேலி: முக்கிய எண்களை SAVE பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
திசையன்விளை- 9384094224
சேரன்மகாதேவி- 9384094223
மானூா்- 9384094222
இராதாபுரம்- 9445000674
நாங்குநேரி- 9445000673
அம்பாசமுத்திரம்- 9445000672
பாளையங்கோட்டை- 9445000669
திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க


