News December 14, 2024
இந்த ஆண்டு 40 கோடி ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் எஸ் பி

புதுச்சேரி இணைய வழி எஸ்.பி. பாஸ்கரன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த வருட மட்டும் ரூ.40 கோடி அளவிற்கு இணைய வழி மோசடியில் புதுச்சேரி சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையவழியில் வரும் வேலைவாய்ப்பு, குறைந்த விலையில் பொருளை கொடுக்கிறோம். ஆன்லைன் டிரேடிங்கில் அதிகமாக சம்பாதிக்கலாம், வீட்டில் இருந்தபடியே வேலை வாய்ப்பு போன்ற எதையும் நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றார்.
Similar News
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW…
News September 13, 2025
புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News September 12, 2025
டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.