News December 14, 2024
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை மறுநாள் தாக்கல்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாளை மறுநாள் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அறிமுகம் செய்யவுள்ளார். இத்திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மக்களவையில் களேபரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
நடிகை சுபாஷினி காலமானார்.. நெஞ்சை உலுக்கும் பதிவு

தமிழ் சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்தது சின்னத்திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். யாராவது நெகட்டிவாக பேசினால் அந்த இடத்திலேயே சுபாஷினி இருக்கமாட்டார் என்று சக நடிகை அபிநவ்யா நினைவுகூர்ந்துள்ளார். இவ்வளவு மென்மையான இதயம் கொண்ட சுபாஷினியா இந்த முடிவை எடுத்தது என நெட்டிசன்கள் வருத்தமுடன் SM-களில் கூறி வருகின்றனர்.
News April 10, 2026
ஜன நாயகனை டவுன்லோட் செய்யாதீங்க.. கடும் எச்சரிக்கை

ஜன நாயகன் படத்தை SM-ல் பகிர்ந்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. சட்டவிரோதமாக படத்தை டவுன்லோட் செய்து பரப்பியவர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 உயர்ந்தது

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் இன்று (ஏப்.10) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹265-க்கும், 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று ₹5,000 குறைந்த நிலையில், இன்று ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


