News December 14, 2024
திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் இன்று வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்படி, இந்த குறைதீர் முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
திருத்தணி வந்த நடிகை ரோஜா

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், திரைப்பட நடிகை ஆர்.கே.ரோஜா திருத்தணி ஜாத்திரை திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். மேலும், அங்கிருந்தவர்கள் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
News September 11, 2025
திருவள்ளூரை வெளுக்க வரும் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று(செப்.11) காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.
News September 11, 2025
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (செப் 12) அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.