News December 14, 2024

BREAKING: ரிலீஸ் ஆனார் அல்லு அர்ஜுன்

image

இரவு சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்லு அர்ஜுன் காலையில் பின் வாசல் வழியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று பெயில் கிடைத்த நிலையிலும் ஆவணங்கள் சிறைக்கு வர தாமதமானதால் இரவு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News March 5, 2026

விசிகவை வைத்து விஜய் வாக்குகளுக்கு இலக்கா?

image

விசிகவுக்கு சென்னையில் தொகுதிகள் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர், வேளச்சேரி, பெரம்பூர் தொகுதிகள் லிஸ்ட்டில் உள்ளதாம். விஜய் போட்டியிடும் தொகுதி & அங்கு பிரியும் சிறுபான்மையினர் & தலித் வாக்குகளை சிதற விடாமல் பெறவே இந்த முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, 2021 தேர்தலில் சென்னையில் தொகுதிகள் கேட்டும் விசிகவுக்கு வழங்கப்படவில்லை.

News March 5, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

லீவு என்றாலே மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 (சனி) வேலைநாளாகும். இதேபோல், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு மார்ச் 10 உள்ளூர் விடுமுறையாகும்.

News March 5, 2026

சாமிக்கு ஓட்டு இல்லாததால் இப்படியா? கண்டித்த HC

image

கரூரில் உள்ள ஒரு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், சாமிகள் ஏழை என்பதாலும், வாக்குரிமை இல்லை என்பதாலும் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையா என மதுரை HC கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்பு செய்த வசதியானவர்களுக்கு வாக்குரிமை உள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையா என்றும் கேட்டுள்ளது.

error: Content is protected !!