News December 14, 2024
கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

தொடர் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டதே தவிர, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை.
Similar News
News March 9, 2026
விழுப்புரம் ஆட்சியர் இளைஞர்களுக்கு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவிப்பின்படி, தாட்கோ (TAHDCO) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு மற்றும் கேபின் குழு பணிகளுக்கான 3 மாத இலவச பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாத தகுதியுள்ள நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News March 9, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
விழுப்புரம்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <


