News December 14, 2024

‘PM-SHRI’ திட்டத்தில் தமிழக அரசு இணையவில்லை!

image

தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மையமாகக் கொண்ட ‘PM-SHRI’ திட்டத்தில், TN அரசு இதுவரை இணையவில்லை என மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, “8ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்துவதை தடுக்க தேசிய மெரிட் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளோம்” என்றார்.

Similar News

News March 7, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 7, மாசி 23 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News March 7, 2026

கமேனியை கொன்ற BLUE SPARROW

image

கமேனியை கொல்வதற்கு இஸ்ரேல் ராணுவம் BLUE SPARROW என்ற அதி நவீன ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் எடை 1,900 கிலோ ஆகும். இதை எதிர்நாட்டு வான்பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிவது சிரமம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், இந்த ஏவுகணை நேரடியாக இலக்கை தாக்காமல் வானுக்கு செல்லும். அதன்பிறகு தாக்கவேண்டிய இலக்கை லாக் செய்துவிட்டு ஒலியின் வேகத்தை விட பலமடங்கு வேகத்தில் கீழே வந்து தாக்குமாம்.

News March 7, 2026

முசுமுசுக்கை கீரையின் நன்மைகள்

image

முசுமுசுக்கை கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களுக்கும், மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கும் முசுமுசுக்கை சூப் சிறந்த மருந்தாகும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் வாய் கசப்பை போக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதன் இலையை அரைத்து சாறு எடுத்து தோசை மாவில் கலந்து ஊற்றிச் சாப்பிடலாம்.

error: Content is protected !!