News December 13, 2024

நம்ப முடியவில்லை! இல்லை!!

image

நடிகர் அல்லு அர்ஜுன் கைதான விஷயத்தை நம்ப முடியவில்லை என நடிகை ரஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியின்போது ஒருவர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து பழிகளையும் ஒருவர் மீது சுமத்துவது வருத்தமளிப்பதாகவும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் கைது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News March 20, 2026

CINEMA 360: சிறை இயக்குநரை லாக் பண்ணும் தனுஷ்!

image

‘சிறை’ இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது *தேர்தல் காரணமாக ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் *நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்ட தான், தற்போது சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளதாக ரஷ்மிகா கூறியுள்ளார். தெலங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் விழாவில் ‘கேர்ள் பிரெண்ட்’ படத்திற்காக அவர் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.

News March 20, 2026

திமுக கூட்டணி உடைந்தது.. எதிர்பாராத அரசியல் திருப்பம்!

image

திமுக கூட்டணியிலிருந்து தவாக வெளியேறிய விவகாரம் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. தங்கள் கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக திமுக பேசி வந்தாலும், சிபிஎம், விசிக, மநீம உடனான தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி நீடிக்கிறது. முன்னதாக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தன. வேல்முருகன் தனியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 20, 2026

சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

image

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?

error: Content is protected !!