News December 13, 2024
ADMK – BJP இடையே கள்ளக் கூட்டணி: நாசர் விளாசல்

இஸ்லாமியரை அவதூறாக பேசிய அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமாரை பணிநீக்க கோரும் தீர்மானத்தில் கையெழுத்திட ADMK MPக்கள் மறுத்துள்ளனர். இதை விமர்சித்துள்ள அமைச்சர் நாசர், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிற்கும் ADMKவின் இரட்டை வேடம் இதன்மூலம் அம்பலமாகியுள்ளது என்றார். மேலும், BJP கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறி, மக்களை ADMK ஏமாற்றுவதாகவும், ADMK-BJP கள்ள உறவு இன்றும் தொடர்வதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 10, 2026
அட்டைப் பெட்டியில் இறந்த குழந்தையை சுமந்த தந்தை!

ஜார்க்கண்டில் குழந்தை இறந்து பிறந்த துக்கத்தில் தவித்த தந்தைக்கு, குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காதது மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது. கண்ணீரிலும் வேதனையிலும் குழந்தையின் உடலை Card-Board பெட்டியில் வைத்து, ஆட்டோவில் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். பெரும் வளர்ச்சியை நாடு கண்டுள்ளதாக பெருமை பேசும் நிலையில், இன்னும் பலர் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் தவிப்பது வேதனையே!
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு… உடனே இதை செய்யுங்க

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு பெரியளவில் உள்ள நிலையில், இந்த டிப்ஸை பயன்படுத்தினால் சிலிண்டரை பெரியளவில் மிச்சம் பண்ணலாம். ➤ பிரஷர் குக்கரில் சமைத்தால் எரிபொருள் 20% மிச்சமாகும் ➤சமையல் ஒரு கொதி நிலையை அடைந்த பின் மிதமான தீயில் சமைக்கலாம் ➤ஊற வைத்து சமைப்பது நல்லது ➤அகலமான பாத்திரத்தை பயன்படுத்தலாம் ➤குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சமைத்தால் நீர் ஆவியாகும் நேரம் குறையும். SHARE IT
News March 10, 2026
CINEMA 360: ஒரே வீச்சில் ‘சேயோன்’

*‘சேயோன்’ படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம் *ரஜினி எழுதி வரும் அவரின் சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகுமாம் *‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார் என டாக் *‘உறியடி’ விஜயகுமார் நடிக்கும் ‘அறிவு’ படத்தில் பிக்பாஸ் சுபிக்ஷா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.


