News December 13, 2024

22 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா… குவியும் வாழ்த்துகள்!

image

தமிழ் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து நடிகை த்ரிஷா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் 22 ஆண்டுகளைக் கடந்து, முன்னணி நாயகியாக வலம்வரும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் அமீர் இயக்கத்தில் டிச.13, 2002இல் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தில் அறிமுகமானார் த்ரிஷா. உங்களுக்கு த்ரிஷா நடித்ததில் பிடித்த படம் எது?

Similar News

News March 23, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.22) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் முருகதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்

News March 22, 2026

விஜய் ஒரு தலைவனே கிடையாது: சரத்குமார்

image

தவெக பற்றி மதிப்பிட ஒன்றுமே கிடையாது என சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு தலைவனே கிடையாது என்று கூறிய அவர், கரூரில் உயிரிழந்த 41 பேரை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரித்தபோதே இது தெரிந்துவிட்டது எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், 1996-ல் எப்படி பிரசாரம் செய்தேனோ, அதேபோல இந்த முறையும் அனைத்தையும், அனைவரையும் விலாவரியாக விமர்சித்து பிரசாரம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

22 கேரட் தங்கம் 1 சவரன் இந்தாண்டு மட்டும் சுமார் <<19451069>>₹25,000 வரை<<>> குறைந்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹13,620-க்கும் 1 சவரன் ₹1,08,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சவரனுக்கு மேலும் ₹20,000 வரை குறையக் கூடும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதேநேரம், மீண்டும் விலை உயரத் தொடங்கிய பின் 1 கிராம் ₹ 22,000 என்ற உச்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளதாம். SHARE IT

error: Content is protected !!