News December 13, 2024
முல்லை பெரியாறு: கேரள அரசு அனுமதி

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. டிச.4-ல் தமிழக PWD அதிகாரிகள் பொருள்களை கொண்டு சென்றபோது, அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு தமிழக சட்டப்பேரவையில் MLAக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரளா தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன?
Similar News
News September 15, 2025
ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு? IT விளக்கம்

ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை வருமான வரித்துறை மறுத்துள்ளது. இது முற்றிலும் வதந்தி எனவும், ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதையும் வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. முன்னதாக, வரும் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியானது. நாடு முழுவதும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்துள்ளனர்.
News September 15, 2025
விரைவில் ‘வடசென்னை – 2’: ஐசரி கணேஷ்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘வடசென்னை’ படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அதன் இரண்டாம் பாகத்திற்கு சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் சிம்பு, சூர்யா படங்களை கையில் வைத்துள்ள வெற்றிமாறன் ‘வடசென்னை’ இயக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. ஆனால் விரைவில் ‘வடசென்னை 2’ படம் உருவாக உள்ளதாக ‘இட்லி கடை’ இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.
News September 15, 2025
செப்டம்பர் 15: வரலாற்றில் இன்று

*உலக மக்களாட்சி நாள். *1835 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை தொடங்கினார். *1891 – விடுதலை போராட்ட வீரர் செண்பகராமன் பிறந்த தினம். *1909 – முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள். *1959 – தூர்தர்ஷன் டிவி சேவை டெல்லியில் ஆரம்பமானது. *1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.