News December 13, 2024
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

தினம் தினம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் OTP குறித்து யாரிடமும் பேச வேண்டாம், தேவையற்ற அழைப்புகளை எடுக்க வேண்டாம் என செங்கல்பட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
தாம்பரம் ஜங்ஷனில் யாருக்கு பச்சை சிக்னல்?

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை திமுக 1 முறை அதிமுக வென்றுள்ளது. தற்போது திமுகவின் எஸ். ஆர். ராஜா எம்.எல்.ஏவாக உள்ளார். தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு வலுவாக உள்ளன. 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சி (NTK) ஆகியவை நகர்ப்புற வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. இந்த முறை தாம்பரம் யாருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 6, 2026
செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

கூடுவாஞ்சேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி தரைத்தளத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறவே பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் முதியவரை போக்சோவில் கைது செய்தனர்.
News March 6, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டில் நேற்று (05.03.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


