News March 23, 2024
சேலத்தில் எலுமிச்சம்பழம் விலை உயர்வு

மராட்டிய மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வரக்கூடிய எலுமிச்சம்பழம் கடந்த சில மாதங்களாக வராத காரணத்தினால் ஆந்திராவில் இருந்து மட்டுமே எலுமிச்சை விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக எலுமிச்சையின் விலை 8 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று சேலம் மாவட்டத்தில் ஒரு மூட்டை எலுமிச்சை 3, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News August 17, 2025
தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டி!

“6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி நடக்கவுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.6,000 பரிசு பெறலாம். விண்ணப்பப் படிவத்தை https://tamilnadupost.cept.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 0427-2253050, 2266370 எண்களை அழைக்கலாம். இப்போட்டி செப்.20-ல் நடக்க உள்ளது” என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்!
News August 17, 2025
சேலம்:கரண்ட் பில் அதிகமா வருதா?

சேலம் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News August 17, 2025
சேலம் ஆகஸ்ட் 17 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஆகஸ்ட் 17 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9:30 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிகழ்ச்சிகள் நேரு கலையரங்கம் ▶️காலை 10:30 மணி இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆர்ப்பாட்டம் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யகோரி ஆட்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️காலை 11:30 மணி திண்டுக்கல் இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️