News December 13, 2024

மீண்டும் மிரட்ட வரும் ‘காற்றழுத்த தாழ்வுப் பகுதி’

image

நாளை வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. 10 நாள்களுக்கு முன் ஃபெஞ்சல் புயல் டெல்டாவையும் வட மாவட்டங்களையும் புரட்டிப் போட்டு சென்றது. நேற்று பெய்த கனமழையால் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன. இந்நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ற செய்தி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

Similar News

News September 14, 2025

சற்றுமுன்: இபிஎஸ் உடன் மீண்டும் இணைந்தனர்

image

OPS ஆதாரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் EPS தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் கூறுகையில், செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்தவரை தங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை; இதனால் தான் ஓபிஎஸ் தலைமையை ஏற்று சென்றோம். தற்போது அதிமுக பொறுப்பிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதால், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

News September 14, 2025

குழந்தைகளின் உயிருக்கு உலைவைக்கும் கிரீம் பிஸ்கட்

image

குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது கிரீம் பிஸ்கட். அவர்களுக்கு இதை வாங்கித்தரும் பெற்றோருக்கு இதனால் ஏற்படும் அபாயத்தை பற்றி தெரிவதில்லை. இதிலுள்ள அளவுக்கு அதிகமான சர்க்கரை & மைதா, இளம் வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களை ஏற்படுத்துகிறதாம். இதில் சேர்க்கப்படும் நிறங்கள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் இதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டாமென டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

News September 14, 2025

நம்ம குறட்டை நமக்கு ஏன் கேட்பதில்லை?

image

தூக்கத்தின்போது லேசான சத்தம் கேட்டாலும் பலரும் விழித்துக் கொள்வோம். ஆனால், நாமே அதிக சத்தத்தில் குறட்டை விட்டாலும், அது நமக்கு கேட்காது. தொண்டை (அ) மூக்கில் காற்றோட்டம் தடைபடுவதே குறட்டைக்கு காரணம். இது நரம்புகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால், அதனை உணரவோ கேட்கவோ முடியாது. எனினும், நாள்பட்ட குறட்டை பிரச்னைக்கு டாக்டரை அணுகுவது நல்லது. குறட்டை விடும் உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!