News December 13, 2024
விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களின் மொத்த விவரம்

தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தருமபுரி, நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை.
Similar News
News March 20, 2026
தேர்தல் வாக்குறுதி.. உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது கூட்டணி, வேட்பாளர் செல்வாக்கு & தேர்தலின் கதாநாயகனான வாக்குறுதிகள் தான். தற்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மகளிர் வாக்குகளை கவரும் விதமான அறிவிப்புகளும், இலவசங்களும் நிச்சயம் இருக்கும். வாக்காளராக நீங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான ஒற்றை வாக்குறுதி பற்றி கமெண்ட் பண்ணுங்க
News March 20, 2026
குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை உறுதி: கனிமொழி

குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும் என கனிமொழி தெரிவித்துள்ளார். விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி எனவும் தனது X பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், துயரிலிருந்து மீண்டு வரவும் துணையாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 20, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 20, பங்குனி 6 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு▶பரிகாரம்: வெல்லம்.


