News March 23, 2024
கடற்கரையில் ஆட்சியர் தூய்மை பணி

நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் தூய்மை பணி இன்று நடைப்பெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கி கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Similar News
News November 5, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற நவ.6ம் தேதி காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!
News November 4, 2025
நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


