News March 23, 2024

திருவள்ளூர் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், ரமணா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Similar News

News November 5, 2025

திருவள்ளூர்: லேசான மழை; கவிழ்ந்த ஆம்னி பேருந்து!

image

கும்மிடிப்பூண்டியில் இருந்து 36 பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலை வழியாக சென்றபோது, லேசான சாரல் மழை பெய்ததால் பம்மதுகுளம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப் பகுதியில் பேருந்து மோதியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News November 5, 2025

திருவள்ளூர்: உடல் துண்டாகி பெண் பலி!

image

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கே.டி.ஜி நகரில் வசித்து வருபவர் தனசேகர். இவர் மனைவி புஷ்பா. இவர் கடைக்கு செல்வதற்காக செவ்வாபேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தை இன்று மாலை கடந்து சென்றுள்ளார். அப்போது சரக்கு ரயில் புஷ்பா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 5, 2025

வேப்பம்பட்டில் ஆய்வு செய்த ஆட்சியர் மு.பிரதாப்

image

திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் வேப்பம்பட்டில் ரூ.44 கோடியில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 கட்டுமானப் பணிகளை இன்று நவம்பர் 04 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்திரவிட்டார். உடன் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!