News December 13, 2024
ஆம் ஆத்மி வென்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் பெயர் பதிவான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு மாநில அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தொகை போதாது என பெண்கள் கருதுவதாகவும், ஆதலால் ரூ.2,100 அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
நாளை சுக்கிரன் பெயர்ச்சி.. பண மழையில் 3 ராசிகள்!

செல்வம், மகிழ்ச்சியை பெருக்கும் சுக்கிர பகவான், நாளை (செப்.15) சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *சிம்மம்: தொழிலில் முன்னேற்றம். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். *துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். விருச்சிகம்: புதிய வருமான வழி உருவாகும். பண பற்றாக்குறை நீங்கி நிதி நிலைமை வலுப்பெறும்.
News September 14, 2025
BREAKING: ஓபிஎஸ் உடன் பேசினார் நயினார்

நயினார் நாகேந்திரன் தன்னை தொலைபேசியில் அழைத்து பேசியதாக ஓபிஎஸ் சற்றுமுன் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு டெல்லி செல்ல வாய்ப்பில்லை எனக் கூறிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் செங்கோட்டையனிடம் நல்ல செய்தியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும், உரிய நேரத்தில் சசிகலாவை சந்திக்கவிருப்பதாக கூறிய அவர், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
News September 14, 2025
நமைச்சலை கக்கும் இதயமற்ற திமுக: விஜய்

வெறுப்பையும், விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் முப்பெரும் விழா (DMK) கடிதத்தில் அழுதுகொண்டிருந்ததாக விஜய் சாடியுள்ளார். கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றி கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று மக்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும், அதன் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது இதயமற்ற திமுகவிற்கு ஒன்றும் புதிதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.