News December 13, 2024

WAY2NEWS TAMILஇல் தி.மலை மகாதீபம் நேரலை

image

கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மிகப்பெரும் ஆன்மிக நிகழ்வாக திருவண்ணாமலை மலை மீது மகாதீபம் ஏற்றும் வைபவம் கருதப்படுகிறது. இந்த வைபவம் இன்று மாலை திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. இதை திருவண்ணாமலைக்கு நேரில் சென்று வழிபட முடியாதோர், வீட்டில் இருந்தபடியே நேரலையாக WAY2NEWS TAMILஇல் வழிபட முடியும். ஆதலால் WAY2NEWS TAMIL-லுடன் இன்று இணைந்திருங்கள்.

Similar News

News August 28, 2025

வசமாக சிக்கிய நடிகை லட்சுமி மேனன்?

image

ஐடி ஊழியரை கடத்தி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு செப்.17 வரை முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதாகியுள்ள அவரது நண்பர்கள் மீது தங்க கடத்தல், அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸ் முடிவு செய்துள்ளது. இதனால், முன்ஜாமின் கெடு முடிந்த பிறகு லட்சுமி மேனன் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News August 28, 2025

ஆசியக் கோப்பை: மெளனம் கலைத்த ஷமி

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது பேசுபொருளானது. இதுதொடர்பாக பேசிய அவர், துலீப் டிராபி தொடரில் தன்னால் ஒரு போட்டியில் 5 நாள்கள் விளையாடும்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாதா என கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்திய அணியின் வெற்றிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஷமியை தேர்வு செய்யாதது பற்றி என்ன நினைக்கிறீங்க?

News August 28, 2025

PM மோடியின் தாயாரை இழிவுபடுத்திய தொண்டர்கள்

image

பிஹாரில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் PM மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மிகவும் தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களை ஏற்காது என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை சகித்துக் கொள்ள முடியாது எனவும், ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!