News December 13, 2024

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News March 8, 2026

கூமாப்பட்டியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூமாப்பட்டி கிளை சார்பில் நாளை இப்திகார் நோன்பு நிகழ்ச்சியை நடைபெற உள்ளது. இதில், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி மற்றும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

News March 8, 2026

விருதுநகர்: 6ம் வகுப்பு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

image

ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கரிக்கோல் ராஜ்(68). இவர் 6-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்களை அறைக்கு அழைத்து சென்று அவர்கள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவர்கள் அவர்களின் தந்தையிடம் கூறினர். இதனை தொடர்ந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 8, 2026

விருதுநகர்: பட்டாசு தயாரித்தவர் கைது

image

ஏழாயிரம்பண்ணை பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது கன்னக்குடும்பன்பட்டியை சேர்ந்த அறிவழகன்(55) முத்தாண்டியாபுரம் ரேஷன் கடை அருகில் தகர செட்டில் பேன்சி ரக பட்டாசுகLai தயாரித்துள்ளார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்த நிலையில் ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!