News December 13, 2024

பாபநாசம் அகத்தியர் அருவிக்கு செல்லத் தடை

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் பகுதிகளில் இன்று (டிச.12) காலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் அகத்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தண்ணீர் வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 21, 2025

அஞ்சல் அயல் முகவர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்ததாவது: அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்த அஞ்சல் அயல் முகவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியான தனிநபர், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சலகங்கள் இல்லாத இடங்களில் சேவைகளை மேம்படுத்த இத்திட்டம் உதவும். விண்ணப்பங்களை 27ம் தேதிக்குள் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் சமர்ப்பிக்கலாம். விவரங்களை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெறலாம்.

News August 21, 2025

நெல்லையில் இன்று முதல் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

image

நெல்லை தச்சநல்லூரில் நாளை (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை நெல்லையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங் கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார் .

News August 21, 2025

நெல்லை: ரூ.96,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் பணி

image

நெல்லை மக்களே; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 (உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.29ம் தேதி மாலை 05.45 மணி வரை. விருப்பமுள்ளவர்கள் <>லிங்கில் <<>>கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!