News March 23, 2024
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ராமு மற்றும் அவரது மனைவி மீனா இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் ராமுவை கொலை செய்த ராமுவின் தாய் மாமன் ஆறுமுகம் என்பவர் மீது நடைபெற்ற வந்த கொலை வழக்கில் ஆரணி கூடுதல் அமர்வு நீதிபதி திருமதி விஜயா ஆயுள் தண்டனை விதித்து நேற்று(மார்ச்.22) தீர்ப்பளித்தார்.
Similar News
News November 5, 2025
தி.மலை: பைக் மோதி விவசாயி பலி!

தி. மலை: வாணாபுரம் அருகே சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் மக்காச்சோளத்தை உலர்த்திக்கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில் வெங்கடேசன், அவரது உறவினர் அன்பரசு ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், வெங்கடேசன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
News November 5, 2025
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (நவ.04) இரவு முதல் இன்று (நவ.5) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News November 4, 2025
தி,மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திருவண்ணாமலை மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க


