News December 12, 2024
கனமழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று சிவகாசி பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும், நாளை விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் நாளையும் பட்டாசு உற்பத்தி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
Similar News
News October 26, 2025
விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 26, 2025
விருதுநகர்: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www<
News October 26, 2025
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு GOOD NEWS

சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.7000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பாதிப்பால் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் வரும் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுக்கான தட்டுப்பாட்டை போக்கும் வகையில், வழக்கமாக தீபாவளி முடிந்து ஒரு மாதம் கழித்து துவங்கும் பட்டாசு உற்பத்தி பணி இந்த ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களிலேயே துவங்க உள்ளது.


