News December 12, 2024
வேப்பூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கல்வராயன் மலைத் தொடர்ச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், கோமுகி அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர் ஆற்றின் மிகை போக்கி மற்றும் அணையின் பிரதான ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட கொத்தனூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 12, 2025
கடலூர் மாவட்டத்தில் 19,908 பேருக்கு தேர்வு

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவ.15 & 16 ஆகிய 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாள்-1 தேர்வு மையங்களில் 4,191 பேரும், தாள்- 2 தேர்வு மையங்களில் 15,717 பேரும் என மொத்தம் 65 தேர்வு மையங்களில் 19,908 பேர் எழுத உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <


