News March 23, 2024

கிருஷ்ணகிரி அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, கே.அசோக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Similar News

News November 5, 2025

கிருஷ்ணகிரி: ஆசிரியருக்கு பாய்ந்த போக்சோ

image

கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் நேற்று (நவ.04) கைவினை கலை ஆசிரியரான சின்னமட்டாரப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (49), மாணவியரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதன்படி பள்ளி சி.இ.ஓ விசாரணை செய்தபோது மாணவியின் புகார் உண்மை என தெரியவந்தது. பின் முருகேசனை பர்கூர் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

News November 5, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (04.11.2025) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

கிருஷ்ணகிரி: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

image

கிருஷ்ணகிரியில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!