News March 23, 2024
செங்கல்பட்டு அருகே வெடித்தது போராட்டம்

மேடவாக்கத்தை சேர்ந்தவர் பாலு நேற்று தனது குடும்பத்துடன் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்றுள்ளார். செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பாலுவின் காரில் இருந்த “Fastag” ஸ்கேன் ஆகாததால் சுங்கசாவடி ஊழியர், பாலு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீடிரென சுங்கசாவடி ஊழியர்கள் பாலுவை தாக்கியுள்ளனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Similar News
News November 5, 2025
மாமல்லபுரத்திற்கு படையெடுக்கும் TVK நிர்வாகிகள்!

மாமல்லபுரம் அருகே, பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தவெக சார்பில் இன்று (நவ.5) பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளார். கட்சியின் உட்கட்டமைப்பு, தேர்தல் வியூங்கள், மக்கள் சந்திப்பு & தேர்தல் பிரச்சாரம் போன்ற முக்கிய முடிவுகள் குறித்து பொதுக்குழுவில் பேச இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
News November 5, 2025
செங்கல்பட்டில் கரண்ட் கட்!

செங்கல்பட்டு, நாளை (நவ.6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருக்கழுக்குன்றம், முத்திகைநல்லான்குப்பம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெரும்பூர், வாயலுார், ஆயப்பாக்கம், விட்டிலாபுரம், நெய்குப்பி, அமிஞ்சிகரை,வீராபுரம், பாண்டூர், விளாகம்,வல்லிபுரம், ஆனுார் & சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
News November 5, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


