News March 23, 2024
புதினுக்கு ரூ.16.71 லட்சம் கோடி சொத்துக்கள்

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சோவியத் யூனியனின் கேஜிபி உளவுத்துறை அதிகாரியான அவர், 5 முறை அதிபராகியுள்ளார். அவருக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், அதில் 19 பங்களாக்கள், 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சொகுசு கப்பலும் அடங்குமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Similar News
News December 29, 2025
ஓரங்கட்டப்படுகிறாரா ரிஷப் பண்ட்?

T20 WC-யில் இடம் கிடைக்காத பண்ட் NZ-க்கு எதிரான ODI தொடரிலும் ஓரங்கட்டப்படலாம் என கூறப்படுகிறது. இஷான் கிஷன் T20 WC அணியை தொடர்ந்து NZ-க்கு எதிரான ODI தொடரிலும் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பண்ட்தான் அணியில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. T20, ODI-ல் ஓரங்கட்டப்படும் அவர், முழு நேர டெஸ்ட் வீரராக மாறலாம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 29, 2025
தமிழ் சினிமா பிரபலம் கிருஷ்ணசாமி காலமானார்

பிரபல ஆவணப்பட தயாரிப்பாளர் முனைவர் S.கிருஷ்ணசாமி(88) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். ‘இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி’ ஆவணப்படம் மூலம் புகழ்பெற்ற இவருக்கு, 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பல ஆவணப்படங்களை தயாரித்துள்ள கிருஷ்ணசாமி, தமிழ் சினிமாவில் பல வரலாற்று படங்களிலும் பணிபுரிந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 29, 2025
திமுக Vs தவெகவுக்கு இதில் தான் போட்டி: அண்ணாமலை

கிறிஸ்துமஸ் விழாக்களில் CM ஸ்டாலின் கலந்துகொண்டதை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு திமுக முதலில் செல்வதா, தவெக முதலில் செல்வதா என்பதில் தான் போட்டி இருந்ததாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் PM மோடி தேவாலயம் சென்றதை சுட்டிக்காட்டிய அவர், ஆனால் பாஜகவை இவர்கள் மதவாத கட்சி என்கின்றனர் எனவும் சாடினார்.


