News December 12, 2024

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நடைத்திறப்பில் மாற்றம்

image

மார்கழி முதல் நாள் டிச.16 முதல் ஜன.13 வரை 29 நாட்கள் ராமேஸ்வரம் கோயிலில் மார்கழி மாதம் பூஜை நடக்கும். அதன்படி கோயில் நடை அதிகாலை 3:30 மணிக்கு திறக்கப்பட்டு 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கும். மார்கழி மாத உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நாளில் பூஜை நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.

Similar News

News August 14, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய சமூகநலச்சங்கம், கடலாடி வட்டாரம்
அ.புனவாசல் செயலக கட்டடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பரமக்குடியில் நடைபெறும் முகாமில் அப்பகுதி மக்கள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்து பயன் பெறலாம். இத்தகவலை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

ராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

இன்று (13.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

ராமநாதபுரத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை

image

வருகிற 15.08.2025 அன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று ஆணையரின் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!