News December 12, 2024
குமரி அணைகளுக்கு குறைந்த நீர் வரத்து!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 414 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 102 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 653 கன அடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 250 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 524 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 149 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News August 14, 2025
குஞ்சன் விளையில் 26 மது பாட்டில்கள் சிக்கியது

சுசீந்திரம் சப் இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் குஞ்சன் விளை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைக்கத் தகவலின் பெயரில் நேற்று அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது லிங்கபிரபு என்பவர் 26 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் இது தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளார்.
News August 13, 2025
102 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 52,098 மனுக்கள்

பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமற்கு இன்று நேரில் சென்று, அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மாவட்டத்தில் ஜூலை.15 முதல் ஆக.12 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
குமரியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

ஆலங்கோடு அருகே சரல்விளையை சார்ந்தவர் சுஜி(34).இவர் 100 நாள் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர் வேலை வாங்கிக் கொடுக்காததால் அந்தப் பணத்தை சுஜி கேட்ட நிலையில் அவரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.