News December 12, 2024

ரஜினிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

image

நடிகர் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். X பதிவில், “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும், மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என்றார்.

Similar News

News September 4, 2025

இஸ்லாம் இந்தியாவில் நிலைத்திருக்கும்: RSS

image

இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது முதல், அது இங்கேயே இருக்கிறது, இங்கேயே இருக்கும் என RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். RSS நூற்றாண்டு நாளையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய அவர், இஸ்லாம் இந்தியாவில் நிலைத்திருக்கும் என உறுதிபட தெரிவித்தார். பரஸ்பர நம்பிக்கை மட்டுமே மோதல்களை தீர்க்க முடியும் என்ற அவர், நாம் அனைவரும் ஒன்று என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

News September 4, 2025

செப்டம்பர் 4: வரலாற்றில் இன்று

image

*1825 – தாதாபாய் நெளரோஜி பிறந்தநாள்.
*1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், தான் கண்டுபிடித்த படம்பிடிக்கும் கருவிக்கு ‘ஈஸ்ட்மேன் கோடாக்’ என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
*1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
*1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2007 – தமிழ் திரைப்பட நடிகை குமாரி ருக்மணி நினைவுநாள்.

News September 4, 2025

பைக், ஆட்டோ, கார்களின் விலை குறைகிறது

image

GST சீர்திருத்தங்களின் அடிப்படையில் மோட்டார் வாகனங்களுக்கான வரம்பு 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,
*1,500 cc-க்கு மிகாத டீசல் கார்கள்.
*ஆம்புலன்ஸ்
*ஆட்டோ உள்பட 3 சக்கர வாகனங்கள்.
*1.200 cc-க்கு குறையாத Hybrids.
*மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள்.
*வாகனங்களின் பாகங்கள்.
*350 cc-க்கு குறைவான பைக்குகள்.

error: Content is protected !!