News December 12, 2024
மீண்டும் மிரட்டும் சாத்தனூர் டேம்.. 4 மாவட்ட மக்கள் உஷார்!

தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 13,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தற்போது 8,000 கனஅடியாக உள்ளது. இதனால், தி.மலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என PWD தெரிவித்துள்ளது. அண்மையில் தென்பெண்ணை வெள்ளத்தால் கடலூர், விழுப்புரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News September 4, 2025
செப்டம்பர் 4: வரலாற்றில் இன்று

*1825 – தாதாபாய் நெளரோஜி பிறந்தநாள்.
*1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், தான் கண்டுபிடித்த படம்பிடிக்கும் கருவிக்கு ‘ஈஸ்ட்மேன் கோடாக்’ என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
*1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
*1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2007 – தமிழ் திரைப்பட நடிகை குமாரி ருக்மணி நினைவுநாள்.
News September 4, 2025
பைக், ஆட்டோ, கார்களின் விலை குறைகிறது

GST சீர்திருத்தங்களின் அடிப்படையில் மோட்டார் வாகனங்களுக்கான வரம்பு 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,
*1,500 cc-க்கு மிகாத டீசல் கார்கள்.
*ஆம்புலன்ஸ்
*ஆட்டோ உள்பட 3 சக்கர வாகனங்கள்.
*1.200 cc-க்கு குறையாத Hybrids.
*மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள்.
*வாகனங்களின் பாகங்கள்.
*350 cc-க்கு குறைவான பைக்குகள்.
News September 4, 2025
GST குறைப்புக்கு பிஹார் தேர்தல் காரணமா? ப.சிதம்பரம்

தற்போது அறிவித்துள்ள GST சீர்திருத்தங்கள் 8 ஆண்டுகள் தாமதமானது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் வீட்டுக்கடனா? குறைந்துவரும் வீட்டு சேமிப்பா? பிஹார் தேர்தலா? டிரம்ப், அவரது வரியா? அல்லது இவை அனைத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.