News March 23, 2024
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

திருச்சி மாவட்டம் கல்லக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

திருச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். திருச்சி ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW
News August 14, 2025
சுதந்திர தினத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொது விருந்து

நாளை (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மதியம் 12 மணிக்கு பொது விருந்து நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து தரப்பினரும் ஏற்றத்தாழ்வு இன்றி அமர்ந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த பொது விருந்து நடக்க இருப்பதாகவும் இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
News August 14, 2025
லால்குடி கார் விபத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

லால்குடி அருகே மாந்துறை என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கார் ஒன்று டூவீலர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் விஸ்வநாதன், சாதிக் பாஷா, அரவிந்த், கார்த்திகேயன் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நபில் உசேன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.