News December 12, 2024
ரஷ்யாவ தொட்ட, நீ கெட்ட! தயாராகும் டெரர் ஆயுதம்

உக்ரைனை சாக்காக வைத்து தன்னை தொடர்ந்து சீண்டும் நேட்டோ நாடுகளை டார்கெட் செய்யும் வகையில், 2025-ல் பெலாரஸில் அதிநவீன Oreshnik ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. நொடிக்கு 3 கிமீ வேகம் செல்லும் இந்த ஏவுகணை, பாரீஸை 8.3 நிமிடத்திலும், லண்டனை 8.8 நிமிடத்திலும் தாக்கும். ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் வல்லமையும் கொண்டது. இதை அண்மையில் உக்ரைனில் ஏவி ரஷ்யா சோதித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 14, 2025
BREAKING: நாளை முதல் மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சமூக நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் 3 லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகையுடன் குழந்தைகளின் அனைத்து விதமான கல்விச் செலவுகளையும் ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
News September 14, 2025
நாற்காலிகளில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகள் வெறும் டிசைன் கிடையாது. நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது அதற்கிடையில் காற்று புகும். அப்படி அடைபடும் காற்று, வெளியேறாவிட்டால் சேரை பிரித்தெடுப்பது சிரமமாக இருக்கும். இதனாலேயே இந்த துளைகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், துளைகளை போடுவதால் பிளாஸ்டிக்கின் தேவை குறைந்து, அது உற்பத்தி செலவை குறைக்கிறதாம். SHARE.
News September 14, 2025
அனைத்து பள்ளிகளிலும் நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 6 – 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9 & 10ம் வகுப்பு செப்.15-26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.26 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறையாகும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு Way2News சார்பில் வாழ்த்துக்கள்!