News December 11, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வந்தது எப்படி என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, ஐகோர்ட் வளாகத்திற்குள் வைத்துதான் கைமாற்றப்பட்டதாக காவல்துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்தது.
Similar News
News August 28, 2025
Health Tips: இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News August 28, 2025
BREAKING: அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் மரணம்

தவெக மாநாட்டிற்கு முன்பும், பின்பும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரை சேர்ந்த மதன், நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சாப்பிட சென்றுள்ளார். அப்போது மதன் காணாமல் போன நிலையில், கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் 22-ம் தேதி விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
News August 28, 2025
2 நாளில் முதல் சாதி மறுப்பு திருமணம்

CPI(M) அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெ.சண்முகம் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, திருத்துறைப்பூண்டியில் உள்ள CPI(M) அலுவலகத்தில் காதலர்கள் சஞ்சய்குமார் – அமிர்தா ஆகியோருக்கு முதல் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.