News March 23, 2024
புஷ்பக் மூலம் புதிய சாதனை படைத்த இந்தியா

புஷ்பக் மூலம் மறுபயன்பாட்டு விண்கல புறப்பாடு வாகனம் (ஆர்எல்வி) கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து சாதனை படைத்துள்ளது. செயற்கைக்கோள்களை ஏவ பயன்படும் ராக்கெட்டுகளுக்கு பதிலாக ஆர்எல்வி வாகனத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் நாடுகள் மட்டுமே இதனை தயாரித்திருந்தன. அந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
Similar News
News February 5, 2026
ராகுல்காந்தியின் ஆடையை விமர்சிக்கும் பாஜக

காதி மற்றும் சுதேசி உடைகளின் மீது மரியாதை இல்லாதபோது, ராகுல் காந்திக்கு பார்லிமெண்ட் மீது எப்படி மரியாதை இருக்கும் என பாஜக MP நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்திரா காந்தி போன்ற காங்., தலைவர்கள் சேலை அணிந்தனர், ஆண்கள் குர்தா அணிந்தனர். ஆனால், ராகுல் காந்தி மட்டும் கிழிந்த, கந்தலான பேண்ட், சட்டை அணிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீங்க?
News February 5, 2026
போன்/ கம்ப்யூட்டர் பார்த்து கண் எரிச்சலா? தவிர்க்க 7 டிப்ஸ்!

கணினி மயமாகிவிட்ட உலகில், கம்ப்யூட்டர், போனை பார்த்தபடியே தான் பலரும் வாழ்கிறோம். இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். அப்படி அவதிப்படுபவர்களில் ஒருவர் தான் நீங்கள் என்றால் உங்களுக்காக சில டிப்ஸை கொண்டு வந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து அந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.
News February 5, 2026
மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன்(79) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் அகராதி தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவருக்கு, 2013-ல் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி TN அரசு கௌரவித்தது. சென்னை பல்கலை.,யின் தமிழ் HOD பொறுப்பு வகித்த ஜெயதேவன், மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல கல்வி குழுக்களுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றது.


