News December 11, 2024

ரேப்பிடோ வாகனங்களுக்கு சிக்கல்

image

இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனாலும், இத்தனை நாள் இது கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 4, 2025

சற்றுமுன்: TV, பைக், ஏசி விலை குறைகிறது

image

28% ஜிஎஸ்டி வரம்பு நீக்கப்பட்டதால், அந்த பட்டியலில் இருந்த பெரும்பாலான பொருள்கள் 18% வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, ஏசி, டிவி (32 inch மேல்), கம்யூட்டர் மானிட்டர், புரொஜெக்டர், டிஷ் வாஷிங் மெஷின் உள்ளிட்டவை 18% வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பைக்குகள்(350cc-க்கு கீழ்) உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

கூல்டிரிங்ஸ், புகையிலை பொருள்களுக்கு 40% வரி

image

சொகுசு கார்கள், கூல்டிரிங்ஸ், பான்மசாலா, புகையிலை பொருள்களுக்கு 40% வரிவிதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பிற்கு இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றங்கள் வரும் 22-ம் தேதி அமலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

உயிர்காக்கும் மருந்துகளுக்கு 0% வரி: FM

image

பீட்சா பிரட், பனீர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக FM நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உயிர்காக்கும் மருந்து பொருள்களுக்கான வரி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதாகவும், அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கும் 18% வரிவிதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிராக்டர், வேளாண் பொருள்களுக்கு 5% வரிவிதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!